மனிதம் காணவில்லை

பாரபட்சம் பாராத ஒரே குலம்-“மனித குலம்”

ஆம்,அது மனிதம் இல்லாத மனித குலம் தான்

சகவாசிகளோ,வனவாசிகளோ யாராயினும்

சுயநலம் எனும் கூரான ஆயுதம் கொண்டு

பாகுபாடின்றி அழிக்கப்படுவர் அல்லவா !!

பாரபட்சம் பாராத ஒரே குலம்-“மனித குலம்”

ஆம்,அது மனிதம் இல்லாத மனித குலம் தான்

காணாமல் போன மனிதத்தை அரும்பாடுபட்டாவது கண்டறிவோம்

கண்டறிந்தால் வாழ்வு நலம்பெற பகிர்ந்து பயன் பெருவோம்…

தோன்றியது #28

கண்ணகி,சீதை,திரௌபதி போன்றோரில் இருந்த தீ,
அகிலத்தில் வசிக்கும் அனைத்து பெண்களின் அகத்தில் என்றும் புகைந்துக்கொண்டிறுக்கிறது என்பதை பலர் அறியவில்லை……

தோன்றியது #27

இருள் சூழ்ந்த இந்த கொரோனா நாட்களில் அமைதியின் சின்னமாக பூத்திருக்கும் இந்த வெள்ளைப்பூ இயற்கையின் எடுத்துக்காட்டே!!💚